search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேஸ்புக்கில் 15 ஆயிரம் லைக், டுவிட்டரில் 5 ஆயிரம் அபிமானிகள் - காங். வேட்பாளராக புதிய நிபந்தனை
    X

    பேஸ்புக்கில் 15 ஆயிரம் லைக், டுவிட்டரில் 5 ஆயிரம் அபிமானிகள் - காங். வேட்பாளராக புதிய நிபந்தனை

    மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் பேஸ்புக்கில் 15 ஆயிரம் லைக்களையும், டுவிட்டரில் 5 ஆயிரம் அபிமானிகளையும் பெற்றிருக்க வேண்டும். #MPassemblyelections #MPCongresscandidates
    போபால்:

    மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று ஒரு செய்திகுறிப்பு வெளியாகியுள்ளது.



    சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் தங்களது பேஸ்புக் பக்கத்தில் 15 ஆயிரம் ‘லைக்’களையும், டுவிட்டரில் 5 ஆயிரம் அபிமானிகளையும் (ஃபாலோவர்ஸ்) பெற்றிருக்க வேண்டும்.  

    மேலும், அனைத்து வாக்குச்சாவடிகள் மட்டத்திலும் காங்கிரஸ் கட்சியினரின் ‘வாட்ஸ்அப்’ குழுக்களுடன்தொடர்பில் இருக்க வேண்டும்.

    அனைத்துக்கும் மேலாக, மத்தியப்பிரதேசம் மாநில காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும் அனைத்து பதிவுகளையும் ‘லைக்’ மற்றும் ‘ரிடுவீட்’ செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. #MPassemblyelections #MPCongresscandidates 
    Next Story
    ×