search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளா வெள்ள நிவாரணத்துக்காக டீக்கடை நடத்தி ரூ.51 ஆயிரம் சேகரித்த மும்பை மாணவர்கள்
    X

    கேரளா வெள்ள நிவாரணத்துக்காக டீக்கடை நடத்தி ரூ.51 ஆயிரம் சேகரித்த மும்பை மாணவர்கள்

    கேரளா வெள்ள நிவாரண நிதிக்காக டீக்கடை நடத்தி 51 ஆயிரம் ரூபாய் சேகரித்து கொடுத்த மும்பை மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. #KeralaRains #KeralaFloods
    மும்பை:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்ததில் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கின. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் இதுவரை 483 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், கேரளா வெள்ள நிவாரண நிதிக்காக மும்பை மாணவர்கள் டீக்கடை நடத்தி 51 ஆயிரம் ரூபாய் சேகரித்து கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



    மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரில் உள்ள அகமதுபூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கேரளா வெள்ள நிவாரண நிதி திரட்ட முடிவு செய்தனர்.

    இதற்காக டீக்கடை நடத்த முடிவு செய்தனர். அதன்படி, டீக்கடை திறந்து தினமும் பணத்தை சேகரித்து வந்தனர். இப்படி சிறுக சிறுக சேகரித்த பணம் 51 ஆயிரம் ஆனது.

    இதைத்தொடர்ந்து, தாங்கள் சேகரித்த பணத்தை எடுத்துக் கொண்டு பள்ளி அலுவலர்களுடன் மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்தனர். அவரிடம் தாங்கள் சேகரித்த பணம் 51 ஆயிரத்தை அளித்து, கேரளா வெள்ள நிவாரண நிதியில் சேர்க்கும்படி கூறினர்.

    கேரளா வெள்ள நிவாரணத்துக்காக மும்பையை சேர்ந்த மாணவர்கள் டீக்கடை நடத்தி 51 ஆயிரம் ரூபாய் அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #KeralaRains #KeralaFloods 
    Next Story
    ×