search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயங்கரவாதத்தை ஒடுக்க பிம்ஸ்டெக் நாடுகள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் - பிரதமர் மோடி
    X

    பயங்கரவாதத்தை ஒடுக்க பிம்ஸ்டெக் நாடுகள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் - பிரதமர் மோடி

    நேபாளத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்தை ஒடுக்க பிம்ஸ்டெக் நாடுகள் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். #BIMSTEC #Modi
    காத்மாண்டு:

    வங்கக் கடலையொட்டி அமைந்து உள்ள இந்தியா, வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் பல்வேறு தொழில் நுட்பம், பொருளாதார ஒத்துழைப்புக்காக ‘பிம்ஸ்டெக்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் 2 நாள் மாநாடு நேபாள நாட்டின் தலைநகரான காட்மாண்டுவில் நேற்று தொடங்கியது.

    இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேபாளம் சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடிக்கு அரசு முறைப்படி சிறப்பான வரவேற்பு மற்றும் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதன்பின்னர், மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

    நாம் ஒன்றுபட்டு நடைபோட வேண்டும். நாம் அனைவரும் வளர்ந்து வரும் நாடுகள். நாம் சமாதானத்தையும், முன்னேற்றத்தையும் விரும்புகிறோம். ஆனால் அவற்றை இன்றைய உலகில், ஒன்றுபடாமல் எந்த ஒரு நாடும் தனிப்பட்ட முறையில் அடைந்து விட முடியாது.

    அண்டை நாடுகளுடனான உறவை இந்தியா எப்போதும் போற்றி பாதுகாக்கும். பிம்ஸ்டெக் நாடுகள் இடையே வர்த்தகம், தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த இந்திய உறுதி பூண்டுள்ளது.

    பயங்கரவாதத்தை ஒடுக்க பிம்ஸ்டெக் நாடுகள் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். பிம்ஸ்டெக் நாடுகளை போலவே தெற்காசிய நாடுகளுடனும் இந்தியா நல்லுறவை பேணிக்காக்கும். பிம்ஸ்டெக் நாடுகளின் வளர்ச்சி, சமாதானம், வளம் ஆகியவற்றை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது.

    பிம்ஸ்டெக் ஸ்டார்ட் அப் உச்சி மாநாட்டை நடத்துவதற்கு இந்தியா தயாராக உள்ளது. 2020-ம் ஆண்டு இந்தியா சர்வதேச புத்த மத மாநாடு நடத்த உள்ளது. இந்த மாநாட்டில் வந்து கலந்து கொள்ளுமாறு பிம்ஸ்டெக் அமைப்பின் உறுப்பு நாடுகளை அழைக்கிறேன் என தெரிவித்தார். #BIMSTEC #Modi
    Next Story
    ×