search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க நேபாளம் சென்றார் மோடி
    X

    பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க நேபாளம் சென்றார் மோடி

    பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று நேபாளத்திற்கு புறப்பட்டுச் சென்றார். #BIMSTECSummit #Modi
    புதுடெல்லி:

    வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் மாநாடு நேபாளத்தில் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.



    வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை இலக்காகக் கொண்ட இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். நேபாளம் சென்றடைந்த மோடிக்கு அரசு முறைப்படி வரவேற்பு மற்றும் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. 

    இந்த மாநாட்டின்போது பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் மோடி பேச உள்ளார். பசுபதிநாதர் கோவில் வளாகத்தில் நேபாள் பாரத் மைத்ரி தர்மசாலையை மோடியும், நேபாள பிரதமரும் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர்.

    பிம்ஸ்டெக் அமைப்பின் கீழ் இதுவரை மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்தை மேலும் ஒருங்கிணைத்து, அமைதியான மற்றும் செழிப்பான வங்காள விரிகுடா பிராந்தியத்தை உருவாக்குவதற்கு இந்த மாநாடு வழிவகுக்கும் என மோடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். #BIMSTECSummit #Modi

    Next Story
    ×