search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எனது அரசை கவிழ்க்க காங்கிரசார் முயற்சி செய்கிறார்கள் - கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி
    X

    எனது அரசை கவிழ்க்க காங்கிரசார் முயற்சி செய்கிறார்கள் - கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி

    காங்கிரசை சேர்ந்த சிலரும், பா.ஜனதா கட்சியினரும் எனது அரசை கவிழ்க்க தொடர்ந்து சதி செய்கின்றனர் என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் ஜே.டி.எஸ். -காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக ஜே.டி.எஸ். கட்சியை சேர்ந்த குமாரசாமியும், துணை முதல் மந்திரியாக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வரனும் உள்ளனர். 2 கட்சியை சேர்ந்தவர்களும் மந்திரிகளாக உள்ளனர்.

    இரு கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்ளார். கூட்டணி ஆட்சி நடந்தாலும் இரு கட்சிகளுக்கும் இடையே பல வி‌ஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

    குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்ற சமயத்தில் சித்தராமையா கூறிய கருத்துக்களால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    கடந்த 3 மாதங்களாக எதுவும் பேசாமல் இருந்த சித்தராமையா மக்கள் ஆசி இருந்தால் மீண்டும் முதல்-மந்திரி ஆவேன் என்று பேசினார். இந்த பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று நிருபர்களிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

    இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரசை சேர்ந்த சிலரும், பா.ஜனதா கட்சியினரும் எனது அரசை கவிழ்க்க தொடர்ந்து சதி செய்கின்றனர். அவர்களது எண்ணம் பலிக்காது.

    செப்டம்பர் முதல் வாரத்தில் கர்நாடகாவில் புதிய முதல்-மந்திரி பொறுப்பேற்பார் என்று பா.ஜனதா கட்சியினர் வி‌ஷம பிரசாரம் செய்து வருகின்றனர். அதற்கான சூழ்நிலை எதுவும் இல்லை.

    கர்நாடக மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியும். எதை பற்றியும் கவலைப்படமாட்டேன். முதல்-மந்திரி பதவியை பாதுகாக்க எந்த முயற்சியும் செய்யமாட்டேன்.

    எனது அரசு 100 நாட்களை கட்டாயம் நிறைவு செய்யும். பதவியை பற்றி எனக்கு கவலை இல்லை. நான் முதல்-மந்திரியாக இருக்கும் வரை என்னால் முடிந்தவற்றை செய்வேன். மக்கள் பணியே எனது இலக்காகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy

    Next Story
    ×