search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவை மறுகட்டமைக்க ஒருமாத ஊதியம் அளிக்கவேண்டும் - கேரள மக்களிடம் பினராயி விஜயன் வலியுறுத்தல்
    X

    கேரளாவை மறுகட்டமைக்க ஒருமாத ஊதியம் அளிக்கவேண்டும் - கேரள மக்களிடம் பினராயி விஜயன் வலியுறுத்தல்

    வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு ஒருமாத ஊதியத்தை நிவாரண நிதியாக கொடுங்கள் என பினராயி விஜயன் அம்மாநில மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். #KeralaRains #KeralaFloods #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் இதுவரை 372 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.



    இந்நிலையில், வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு ஒருமாத ஊதியத்தை நிவாரண நிதியாக கொடுங்கள் என பினராயி விஜயன் அம்மாநில மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட சேத பகுதிகளை ஆய்வுசெய்தபின், பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் மாநிலத்திற்கு ரூ.30 ஆயிரம் கோடி வரையில் இழப்பு நேரிட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் மழை குறைந்து, வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. முகாம்களில் தங்கி இருக்கும் மக்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட வசதிகளை மீண்டும் மேம்படுத்த ஏராளமான நிதி தேவைப்படுகிறது.

    எனவே, கேரளாவில் வாழும் மக்களும், வெளிநாடுகளில் வாழும் கேரள மக்களும் தங்களின் ஒருமாத ஊதியத்தை மாநிலத்தின் மேம்பாட்டுக்காக அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #KeralaRains #KeralaFloods #PinarayiVijayan
    Next Story
    ×