search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    42 உயிர்களை பறித்த ஐதராபாத்  இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு
    X

    42 உயிர்களை பறித்த ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு

    தெலுங்காவின் ஐதராபாத் நகரில் நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளது.#HyderabadTwinBombBlastCase
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்டு 25-ம் தேதி லும்பினி பார்க் மற்றும் கோகுல்சாட் ஆகிய இரண்டு இடங்களில் குண்டு வெடித்தது.  இந்த குண்டு வெடிப்பில் 42 பேர் பலியாகினர். மேலும், 50க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இதுதொடர்பாக, தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்புக்கு காரணமான இந்தியன் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த 4 பேரை கைது செய்து சத்திரப்பள்ளி சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.  இந்த வழக்கு நம்பள்ளி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பாக இருதரப்பு வாதங்கள் கடந்த 7ம் தேதி நிறைவடைந்தது.

    இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இரட்டை குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்தினர் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. #HyderabadTwinBombBlastCase
    Next Story
    ×