search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தானில் 60 சதவீத ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு டெபாசிட் கிடைக்காது- கருத்து கணிப்பில் அதிர்ச்சி தகவல்
    X

    ராஜஸ்தானில் 60 சதவீத ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு டெபாசிட் கிடைக்காது- கருத்து கணிப்பில் அதிர்ச்சி தகவல்

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் 60 சதவீத ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் போட்டியிட்டால் டெபாசிட் கிடைக்காது என பா.ஜனதா நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. #RajasthanAssemblyElection #BJP
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. வசுந்தரா ராஜேசிந்தியா முதல்-மந்திரி பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைகிறது.

    இதையடுத்து இம்மாத இறுதியில் தேர்தல் அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இதற்கிடையே பா.ஜனதா மேலிடம் ராஜஸ்தானின் தேர்தல் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. மேலிட பொறுப்பாளரான அவினாஷ்ராய் கன்னா ஜெய்ப்பூரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    குறிப்பாக எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடு பற்றி கருத்துக்கள் கேட்டார். மீண்டும் அவர்களுக்கு டிக்கெட் வழங்கலாமா? அல்லது புதுமுகங்களை களத்தில் இறக்கலாமா? என்று ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவினாஷ் கன்னா நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜஸ்தான் தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படும். தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் மீது எந்த தவறான கருத்தும் இல்லை.

    ஆனால் செயல்பாடு சரி இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது. அவர்களுக்கு பதில் புதுமுகங்கள் களத்தில் இறக்கப்படுவார்கள். மக்கள் மத்தியில் பெயர் பெற்று நல்ல முறையில் பணியாற்றியவர்களுக்கு மட்டும் தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 எம்.எல்.ஏ.க்களில் பா.ஜனதாவின் பலம் 160 ஆக உள்ளது. அவர்களது செயல்பாடுகள் பற்றி பா.ஜனதா ரகசியமாக கருத்து கணிப்பு நடத்தியது. அதில் 60 சதவீத எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடு சரியில்லை என்றும் அவர்களுக்கு மீண்டும் தேர்தல் டிக்கெட் வழங்கினால் டெபாசிட் இழப்பார்கள் என்றும் தகவல் வெளியானது.

    இதுபற்றியும் அவினாஷ் ராய் கன்னா ஆலோசனை நடத்தினார். எனவே 60 சதவீத எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் வாய்ப்பு இல்லை என்றும் அவர்களுக்கு பதில் மக்கள் செல்வாக்கு பெற்ற புதுமுகங்களுக்கு டிக்கெட் வழங்க பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. #RajasthanAssemblyElection #BJP
    Next Story
    ×