search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடியின் அமைச்சரவையில் சுஷ்மா சுவராஜ் வேலையில்லாதவராகிவிட்டார் - ராகுல் காந்தி விமர்சனம்
    X

    மோடியின் அமைச்சரவையில் சுஷ்மா சுவராஜ் வேலையில்லாதவராகிவிட்டார் - ராகுல் காந்தி விமர்சனம்

    பிரதமர் மோடியின் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வேலையில்லாதவராகிவிட்டார் என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். #RahulGandhiInLondon
    லண்டன்:

    ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் மீது தொடர்ச்சியான தாக்குதலை முன்வைத்து வருகிறார். பிரதமர் மோடியின் வெளியுறவுக்கொள்கை விவகாரத்தில் குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் சீன விவகாரங்களில் கடுமையான தாக்குதலை முன்வைத்துள்ளார் ராகுல் காந்தி.

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரியின் முழு அதிகாரத்தையும் மோடி தன் பக்கம் இழுத்து வைத்துள்ளார். வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு வேலையில்லாமல் செய்துவிட்டார். அவருக்கு இப்போது இருக்கும் வேலை விசா வழங்குவது மட்டும்தான் என கூறியுள்ளார் ராகுல்காந்தி.  #RahulGandhiInLondon
    Next Story
    ×