search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி?
    X

    கேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி?

    மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவை மீட்க https://donation.cmdrf.kerala.gov.in/ என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்களால் முடிந்த உதவியை வழங்கலாம். #KeralaFloods #DonateForKerala
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் 100 வருடங்களில் இல்லாத அளவு இந்த ஆண்டு மழையின் அளவு அதிகமாக உள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 324 உயிரிழந்துள்ளனர். 2,23,139 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கொட்டும் மழையிலும் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



    இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவை மீட்க தங்களால் முடிந்த அளவு உதவுமாறு கேரள முதலவர் பினராயி விஜயன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    உதவ முன்வருவோர் நிவாரண நிதி அனுப்ப கீழுள்ள link ஐ கிளிக் செய்யவும்.

    https://donation.cmdrf.kerala.gov.in/

    அல்லது கீழ்கண்ட வங்கி கணக்குக்கு நேரடியாக அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

    முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதி,
    வங்கி கணக்கு எண் : 67319948232
    வங்கி : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
    ஐ.எப்.எஸ்.சி : SBIN0070028
    கணக்கு வகை : சேமிப்பு
    PAN : AAAGD0584M
    SWIFT CODE : SBININBBT08.

    இதேபோல் திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் மற்றும் கண்ணூர், இடுக்கி, வயநாடு கலெக்டர் அலுவலகங்களில் நிதி சேகரிப்பு மையங்கள் செயல்படுகின்றன. அங்கும் நேரடியாக சென்று நிதியுதவி வழங்கலாம். #KeralaFloods #DonateForKerala
    Next Story
    ×