search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாலுவுக்கு ஜாமீனை இம்மாதம் 27-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு
    X

    லாலுவுக்கு ஜாமீனை இம்மாதம் 27-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு

    உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. #LaluBail
    பாட்னா:

    பீகார் மாநில முன்னாள் முதல்வராக இருந்த ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன முறைகேட்டில் சிக்கினார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் லாலு பிரசாத் யாதவ் மீது தொடரப்பட்டது. இதில் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.

    முதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2-வது வழக்கில் 3½ ஆண்டுகளும், 3-வது வழக்கில் 5 ஆண்டும் லாலுவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனால், ராஞ்சி பிர்சா முன்டா சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

    இடையில், அவரது இளைய மகனும் சட்டமன்ற உறுப்பினருமான தேஜ் பிரதாப் யாதவுக்கு கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. அதற்காக 3 நாள் பரோலில் வெளியே வந்த லாலு பரோல் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

    பின்னர், உடல்நலம் பாதிப்பு காரணமாக 6 வார காலம் ஜாமீன் வழங்கக்கோரி ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் லாலு மனு தாக்கல் செய்திருந்தார். அதனடிப்படையில், அவருக்கு 6 வார காலம் ஜாமீன் வழங்கப்பட்டது.

    ஜாமீன் காலம் ஜூன் 27-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில் அடுத்தகட்ட விசாரணையின் போது ஜாமீனை ஜூலை 3-ம் தேதி வரை ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் நீட்டித்தது.

    இந்நிலையில், தொடர் சிகிச்சையில் லாலு பிரசாத் யாதவ் இருப்பதால் அவரது ஜாமீனை ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நீட்டித்து கடந்த 10-ம் தேதி ஜார்கண்ட் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நேற்று நடைபெற்ற விசாரணயில் மருத்துவ காரணங்களுக்காக லாலுவுக்கு வருகிற 27-ம் தேதி வரை மீண்டும் ஜாமீனை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    லாலு பிரசாத் யாதவ் தற்போது மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×