search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனமழை பாதிப்புகளை பார்வையிட இன்று கேரளா புறப்பட்டு செல்கிறார் பிரதமர் மோடி
    X

    கனமழை பாதிப்புகளை பார்வையிட இன்று கேரளா புறப்பட்டு செல்கிறார் பிரதமர் மோடி

    கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி இன்று கேரளா புறப்பட்டு செல்கிறார் தகவல் வெளியாகியுள்ளது. #KeralaFloods #KeralaRain #PMModi
    புதுடெல்லி  :

    கேரளா மாநிலத்தில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.

    மொத்தம் உள்ள 39 அணைகளில் 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தொடர் மழையால் கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

    கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவாலும் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், பெருமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி இன்று கேரளா செல்ல உள்ளார். இன்று மாலை நடைபெற உள்ள மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச்சடங்கு முடிந்த பிறகு அவர்  கேரளா புறப்பட்டு செல்கிறார்.

    வெள்ள பாதிப்புகளை நாளை பார்வையிடும் அவர்  கனமழையினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த தகவலை மத்திய மந்திரி அல்போன்ஸ் உறுதிபடுத்தியுள்ளார். #KeralaFloods #KeralaRain #PMModi   
    Next Story
    ×