search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தந்தையுடன் சேர்ந்து  ஒன்றாக கல்லூரியில் படித்த வாஜ்பாய் - சுவாரஸ்ய தகவல்
    X

    தந்தையுடன் சேர்ந்து ஒன்றாக கல்லூரியில் படித்த வாஜ்பாய் - சுவாரஸ்ய தகவல்

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் அவரது தந்தை கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாய் இருவரும் ஒன்றாக கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றுள்ளனர். #AtalBihariVajpayee #Vajpayee #RIPVajpayee
    புதுடெல்லி :

    மத்தியப்பிரதேசம் மாநிலம் குவாலியரில் 1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி வாஜ்பாய் கிருஷ்ணா தேவி மற்றும் கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாயிக்கு பிறந்தார் அடல் பிஹாரி வாஜ்பாய். குவாலியரின் விக்டோரியா கல்லூரியில் படித்த அவர் இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் தனி தகுதியுடன் பட்டம் பெற்றார்.

    1946-ம் ஆண்டு கான்பூரில் உள்ள டி.ஏ.வி. கல்லூரியில் சேர்ந்த வாஜ்பாய் எம்.ஏ., அரசியல் அறிவியல் துறையில் முதல் வகுப்பு பட்டம் பெற்றார்.

    பின்னர் அதே கல்லூரியில் தனது தந்தை கிருஷ்ன பிகாரி வாஜ்பாயுடன் சேர்ந்து 1948-ம் ஆண்டு இருவரும் ஒன்றாக சட்டம் பயின்றனர்.

    இதனால், வாஜ்பாய் மற்றும் அவரது தந்தை இருவரும் கல்லூரியில் ஒன்றாக சேர்ந்து படிப்பதை பற்றிய பேச்சாகவே அக்காலகட்டத்தில் கான்பூர் எங்கும் இருந்தது.  

    மேலும், கல்லூரி விடுதியில் உள்ள அறை ஒன்றில் இருவரும் சேர்ந்து தங்கியவாறு கல்லூரிக்கு சென்றுள்ளனர். வகுப்புக்கு வாஜ்பாய் தாமதமாக வந்தால் அதற்கான காரணத்தை அவரது தந்தையிடம் கேட்பதை கல்லூரி ஆசிரியர்கள் வழக்கமாக வைத்திருந்தனர் .

    ஆனால், ஆர்.எஸ்.எஸ் இயக்க பிரச்சார கூட்டங்களில் தீவிரமாக பணியாற்ற வேண்டி இருந்த காரணத்தால் சட்டப்படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழ்நிலை வாஜ்பாய்க்கு ஏற்பட்டது.

    எனினும், கான்பூர் பல்கலைக்கழகத்தில் 1993-ம் ஆண்டு சேர்ந்த வாஜ்பாய், அங்கு தத்துவத்தில் பி.எச்.டி பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  #AtalBihariVajpayee #Vajpayee #RIPVajpayee                          
    Next Story
    ×