search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூருவில் இருந்து லக்னோவுக்கு மாறும் விமான கண்காட்சி - குமாரசாமி மோடிக்கு கடிதம்
    X

    பெங்களூருவில் இருந்து லக்னோவுக்கு மாறும் விமான கண்காட்சி - குமாரசாமி மோடிக்கு கடிதம்

    ஆண்டுதோறும் பெங்களூருவில் நடக்கும் விமான கண்காட்சி இந்த ஆண்டு உத்தரப்பிரதேசத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இதற்கு கர்நாடக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. #AeroIndia #AirExpo
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆண்டு தோறும் விமான கண்காட்சி நடப்பது வழக்கம். கடந்த 1996-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த கண்காட்சியை இம்முறை உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்த தகவலோ, மறுப்பு தகவலோ வரவில்லை.

    விமான கண்காட்சி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதும், கர்நாடக மாநில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 2019 உள்ள நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு பெங்களூருவில் நடைபெறும் உலக புகழ் பெற்ற விமான கண்காட்சியை உத்தரபிரதேசத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது என அம்மாநில முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும், விமான கண்காட்சியை நடத்துவதற்கான அனைத்து விதமான கட்டமைப்பு வசதிகளும் பெங்களூருவில் உள்ளது. ஆயினும் இந்த விமான கண்காட்சியை உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 

    இந்நிலையில், குமாரசாமி இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். 
    Next Story
    ×