search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை விக்ரம் சாராபாய் சிலை இஸ்ரோ அலுவலகத்தில் திறப்பு
    X

    இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை விக்ரம் சாராபாய் சிலை இஸ்ரோ அலுவலகத்தில் திறப்பு

    இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படும் விக்ரம் சாராபாயின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலை இஸ்ரோ தலைமையகத்தில் திறந்து வைக்கப்பட்டது. #ISRO #VikramSarabhai
    பெங்களூரு:

    குஜராத் மாநிலத்தில் பிறந்தவரான விக்ரம் சாராபாய் இங்கிலாந்தில் இயற்கை அறிவியலில் படித்து வந்த போது, இரண்டாம் உலகப்போர் மூண்டதால் நாடு திரும்பி, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் சேர்ந்தார். 

    சி.வி.ராமனின் வழிகாட்டுதலில் காஸ்மிக் கதிர்களின் விளைவுகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். போர் முடிந்ததும், இங்கிலாந்தில் படிப்பைத் தொடர்ந்தார். முனைவர் பட்டம் பெற்ற பிறகு, நாடு திரும்பினார்.

    இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான குழு பேரவை (INCOSPAR) தொடங்கப்பட்டபோது அதன் தலைவராக விக்ரம் சாராபாய் நியமிக்கப்பட்டார். 1969-ல் இதற்கு மாற்றாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தொடங்கப்பட்டது. இந்தியாவில் முதன்முதலாக ராக்கெட்டை வடிவமைத்து, அதைச் சோதிப்பதற்கான திட்டங்களை அவர் வகுத்தார்.

    இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை என்று அழைக்கப்பட்ட விக்ரம் சாராபாயின் 99-வது பிறந்த நாள் விழா பெங்களூரு இஸ்ரோ தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. அவரின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×