search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி தேவஸ்தானத்தில் வேலைவாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி - முன்னாள் ஊழியர் கைது
    X

    திருப்பதி தேவஸ்தானத்தில் வேலைவாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி - முன்னாள் ஊழியர் கைது

    திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்த முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர். #arrest

    திருப்பதி:

    திருப்பதி அடுத்த சோமலா மண்டலம் கந்துகூரு கிராமத்தை சேர்ந்தவர் பாலி செட்டி ரெட்டிபிரசாத். இவர் திருப்பதி தேவஸ்தானத்தில் வேலைசெய்த போது விடுதியில் தங்க வரும் பக்தர்களிடம் கூடுதலாக பணம் பெற்றதாக வந்த புகாரின் பேரில் திருப்பதி தேவஸ்தானம் இவரை வேலையில் இருந்து நீக்கியது.

    இதன் பின்னர் இவர் நல்கொண்டா மாவட்டம் சூரியப்பேட்டையை சேர்ந்த சுதாகர் ரெட்டி, கோவர்த்தன் ரெட்டி வெங்கடேஷ், பிரவீன் ஆகியோரிடம் ரெயில்வே அமைச்சர் எனக்கு தெரிந்தவர் அதனால் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.27.5 லட்சம் பெற்று கொண்டு உள்ளார்.

    இதேப்போல் திருப்பதியை சேர்ந்த ரவிதேஜா, கிருஷ்ணா, கோபால் ஆகியோருக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.23.5 லட்சம் பணம் வாங்கி உள்ளார்.

    நீண்ட நாட்களாக வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் திருப்பதி கிரைம் டி.எஸ்.பி. ரவிசங்கர் ரெட்டியிடம் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடா நரசிம்மா பாலிசெட்டி ரெட்டி பிரசாத்தை நேற்று கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

    வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணத்தை கிரிக்கெட் பெட்டிங்கில் கட்டி ரூ.50 லட்சத்தை இழந்து விட்டதாக கூறியுள்ளார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×