search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் ஒப்பந்தத்தை எனக்கு தாருங்கள்- மக்களவையில் பேப்பர் பிளைட் காட்டிய காங். எம்.பி
    X

    ரபேல் ஒப்பந்தத்தை எனக்கு தாருங்கள்- மக்களவையில் பேப்பர் பிளைட் காட்டிய காங். எம்.பி

    ‘முன்னனுபவம் இல்லாதவர்கள் ரபேல் விமானத்தை தயாரிப்பதை விட தன்னால் சிறந்த விமானம் தயாரிக்க முடியும் என காங்கிரஸ் எம்.பி சுனில் ஜாஹர் பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். #MonsoonSession #RafaleDeal
    புதுடெல்லி:

    ரபேல் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் மத்திய அரசுக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் கடும் மோதல் இருந்து வருகிறது. விமான தயாரிப்பில் எந்த அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்திடம் போர் விமானங்கள் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து வருகிறது.

    இன்று பாராளுமன்றம் கூடியதும் இரு அவைகளிலும் இந்த பிரச்சனை வெடித்தது. மக்களவையில் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் ரபேல் விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என கோரி கோஷம் எழுப்பினர். பின்னர், பாராளுமன்றத்துக்கு வெளியே அவர்கள் சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷம் போட்டதில் ஏற்பட்ட அமளிக்கு இடையிலும், அக்கட்சி எம்.பி சுனில் ஜாஹர் மத்திய அரசின் ரபேல் ஒப்பந்தத்தை கிண்டலடிக்கும் வகையில் பேசியது ரசிக்க வைத்தது. ‘ஒரு விமானம் கூட தயாரித்த முன் அனுபவம் இல்லாதவர்களை விட நான் நன்றாகவே ரபேல் விமானத்தை தயாரிப்பேன். எனக்கு ரபேல் ஒப்பந்தத்தை தர வேண்டும்’ என தான் கையில் வைத்திருந்த பேப்பரால் செய்யப்பட்ட விமான மாதிரியை காண்பித்தார்.

    மேலும், பேப்பர் விமானத்தை தயாரிக்க நேற்று இரவு வரை தான் நேரம் எடுத்துக்கொண்டதாக சுனில் ஜாஹர் பேசினார்.
    Next Story
    ×