search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஃபேல் போர் விமான ஊழல் சர்ச்சை - சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்
    X

    ரஃபேல் போர் விமான ஊழல் சர்ச்சை - சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

    ரஃபேல் போர் விமானம் வாங்குவதில் ஊழல் நடந்திருப்பதாக எழுப்பப்பட்ட சர்ச்சை குறித்து மத்திய அரசு பதிலளிக்குமாறு பாராளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். #RafaleDeal
    புதுடெல்லி:

    2016-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் இருந்து  36 டஸ்ஸால்ட் ரஃபேல் என்ற போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்காக இந்தியா ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி முன்னர் பேசுகையில், ‘ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் வெவ்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். முதலில் ஒப்பந்தம் வெளிப்படையானது என்றார், பிறகு அது மிகப்பெரிய் ரகசியம் என்கிறார். எனவே இந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது’ என குற்றம் சாட்டினார்.

    அதேபோல், மத்திய அரசின் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசியபோதும், ரஃபேல் ஒப்பந்தத்தில் மோடியின் நெருங்கிய நண்பர் பயனடைந்திருப்பதாகவும், ரஃபேல் ஒப்பந்தம் குறித்து நிர்மலா சீதாராமன் உரிய பதிலளிக்க வேண்டும்  எனவும் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், இன்று பாராளுமன்றத்தின் வளாகத்தில் இருக்கும் மகாத்மா காந்தியின் சிலை முன்பு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜ் பாப்பர், குலாம் நபி ஆசாத், அனந்த் ஷர்மா, அம்பிகா சோனி, ஆம் ஆத்மி கட்சி எம்.பி சுசில் குப்தா உள்ளிட்ட எம்.பி.க்கள் பங்குபெற்ற இந்த போராட்டத்தில் ரஃபேல் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உரிய பதிலளிக்குமாறு கோஷம் எழுப்பினர்.

    மேலும், இந்த விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். முன்னதாக, இன்று நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில் பேசிய காங்கிரஸ் எம்.பி, காகிதத்தால் செய்யப்பட்ட விமானத்தை காட்டி, பிரான்ஸை விட தாம் சிறப்பாக விமானம் செய்வதாகவும், தமக்கும் இதுபோன்ற புதுவாய்ப்பு ஒன்றை வழங்குமாறும் சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார். #RafaleDeal
    Next Story
    ×