search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சடங்கு என பெண்ணுறுப்பை சிதைக்கும் கொடூரம் - வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
    X

    சடங்கு என பெண்ணுறுப்பை சிதைக்கும் கொடூரம் - வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

    சடங்கு எனும் பெயரில் சிறுமிகளின் பெண்ணுறுப்பை சிதைக்கும் கொடூரத்தை தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஆப்ரிக்க நாடுகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் சிறுமிகளுக்கு பெண்ணுறுப்பு சிதைப்பு செய்யும் சடங்கு சில இனக் குழுவினரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும், தாவூதி, போஹ்ரா போன்ற சமூகத்தில் இந்த சடங்கு பின்பற்றப்படுகிறது.

    பெண்ணுறுப்பில் உள்ள ஒரு நரம்பை அறுத்து தைக்கும் இந்த பழமைவாத சடங்கிற்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் சுனிதா திவாரி என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார். போக்ஸோ சட்டத்தின் படி இந்த கொடூர சடங்கை தண்டனைக்குரிய குற்றம் என மனு தாரர் சார்பில் வாதிடப்பட்டது. 

    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம். கான்வில்கர் மற்றும் நீதிபதி டி.ஐ.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான  தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் 'பெண்ணுறுப்பு சிதைப்பு' அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் குற்றச்செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

    இதையடுத்து ஒருவர் பெண்ணுறுப்பு சிதைப்பினை செய்துகொள்ள விரும்பவில்லை எனில், அதை செய்து கொள்ளும்படி யாரும் வற்புறுத்த முடியாது என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய  நீதிபதி சந்திரசூட் ஒரு பெண்ணின் உடலை மத அடையாளங்களுக்கு உட்படுத்துவதா? என கேள்வியெழுப்பினார். இதையடுத்து, இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று மீண்டும் வந்த நிலையில் வழக்கு 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
    Next Story
    ×