search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு இல்லத்தில் பாலியல் வன்கொடுமை-  பீகார் மந்திரி ராஜினாமா
    X

    பாதுகாப்பு இல்லத்தில் பாலியல் வன்கொடுமை- பீகார் மந்திரி ராஜினாமா

    பீகார் மாநிலத்தில் பாதுகாப்பு இல்லத்தில் நடந்த பாலியல் வன்முறை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், மாநில சமூக நலத்துறை மந்திரி ராஜினாமா செய்துள்ளார். #BiharShelterHomeScandal #BiharMinisterResigns
    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. 

    இந்நிலையில், சிறுமிகள் சீரழிக்கப்பட்ட பாதுகாப்பு இல்லத்திற்கு மாநில சமூக நலத்துறை மந்திரி குமாரி மஞ்சு வர்மாவின் கணவர் சந்தேஷ்வர் வர்மா அடிக்கடி சென்று வந்ததாகவும், அதனால் பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தேஷ்வர் வர்மாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு தார்மீக பொறுப்பேற்று குமாரி மஞ்சு வர்மா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.

    இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், குமாரி மஞ்சு வர்மா இன்று ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர்  நிதிஷ் குமாரிடம் வழங்கியுள்ளார். 

    இந்த வழக்கில் யாராக இருந்தாலும், மந்திரி வர்மாவாக இருந்தாலும் யாரையும் விடமாட்டோம் என முதல்வர் நிதிஷ் குமார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. #BiharShelterHomeScandal #BiharMinisterResigns
    Next Story
    ×