search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் பிரிவினைவாதிகள் போராட்டம் - ஜம்முவில் இருந்து அமர்நாத் யாத்திரை 2 நாள் ரத்து
    X

    காஷ்மீர் பிரிவினைவாதிகள் போராட்டம் - ஜம்முவில் இருந்து அமர்நாத் யாத்திரை 2 நாள் ரத்து

    ஜம்முவில் பிரிவினைவாதிகள் இருநாள் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் இன்றும் நாளையும் அமர்நாத் யாத்திரை 2 நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஜூன் 28-ம் தேதி முதல் யாத்ரிகர்கள் குழு புறப்பட்டு சென்றது.

    இதுவரை இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர். மேலும் பலர் தரிசனத்துக்காக ஜம்மு மாவட்ட மலையடிவார முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


    இதற்கிடையில், காஷ்மீரில் வாழும் மக்களின் நிரந்தர குடியுரிமையை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பு சட்டம் 35A தொடர்பாக நாளை (திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெறவுள்ளது.

    இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜம்முவில் உள்ள பிரிவினைவாத இயக்க தலைவர்கள் இன்றும் நாளையும் இருநாள் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.


    இதைதொடர்ந்து, அசம்பாவித சம்பங்கள் நிகழாமல் தடுக்கும் வகையிலும் தற்காப்பு நடவடிக்கையாகவும் ஜம்முவில் இருந்து அமர்நாத் யாத்திரீகர்கள் இன்றும் நாளையும் புறப்பட்டு செல்ல அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. #AmarnathYatra #AmarnathYatrasuspended
    Next Story
    ×