search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவுடனான நெருக்கத்தை பாகிஸ்தான் மக்கள் விரும்புகிறார்கள் - சரத் பவார்
    X

    இந்தியாவுடனான நெருக்கத்தை பாகிஸ்தான் மக்கள் விரும்புகிறார்கள் - சரத் பவார்

    இந்தியாவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதை பாகிஸ்தான் மக்கள் விரும்புவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். #SharadPawar #NCP
    மும்பை :

    மகாராஷ்டிர மாநிலம், புனேவில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பங்கேற்று பேசினார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது:- 

    இந்தியாவில் உள்ள சிறுபான்மையின மக்களை பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என சிலர் தொடர்ந்து கூறி வருகிறார்கள். பாகிஸ்தான் என்றால் என்ன? நமக்கும் பாகிஸ்தானுக்கும் இன்று பல்வேறு வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், சுதந்திரத்துக்கு முன்னர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது தான் பாகிஸ்தான். 

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நான் பதவி வகித்த போது பலமுறை பாகிஸ்தானுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உள்பட பாகிஸ்தான் மக்களிடம் பலமுறை நான் கலந்துரையாடியுள்ளேன்.

    அவ்வாறு, நான் கலந்துரையாடிய ஒவ்வொரு முறையும் இந்தியாவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புவதை உணர்ந்தேன். பாகிஸ்தானியர்கள் பலரின் சொந்த சகோதர சகோதரிகள் உத்திரப்பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் வசித்து வருகிறார்கள். ஆனால், இருநாடுகளுக்கும் இடையே உள்ள பதற்றமான சூழல் காரணமாக அவர்கள், ஒருவரை ஒருவர் சுலபமாக சந்தித்துக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். 

    எனவே, சிறுபான்மையினர் பாகிஸ்தானுக்கு செல்லலாம் என கூறுபவர்களுக்கு இந்தியாவை பற்றியும் தெரியாது, பாகிஸ்தானை பற்றியும் தெரியாது. இந்த நிலையில் தான் அவர்கள் அவ்வாறு முழக்கமிட்டு வருகிறார்கள். 

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #SharadPawar #NCP
    Next Story
    ×