search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டி - ரேபரேலியில் யார்?
    X

    பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டி - ரேபரேலியில் யார்?

    பாராளுமன்ற பொது தேர்தலில் ராகுல் காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். ரேபரேலியில் சோனியா அல்லது பிரியங்கா போட்டியிடலாம் என தெரியவந்துள்ளது. #RahulGandhi #RahulGandhitAmethi
    புதுடெல்லி:

    தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடையும் நிலையில் சில மாதங்களுக்கு முன்னதாகவே தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆளும் பா.ஜ.க.வை இந்த தேர்தலில் எப்படியும் வீழ்த்தியே தீர வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் ஒருமித்த கருத்துடன் உள்ளன. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தேர்தல் கூட்டணிக்கான காய் நகர்த்தல்களை தொடங்கி விட்டது.

    கம்யூனிஸ்ட் மற்றும் சில மாநிலங்களில் உள்ள முக்கிய கட்சிகள் பலமான கூட்டணி அமைத்து காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இரண்டுமே ஆட்சிக்கு வரும் வாய்ப்பை தவிர்க்க திட்டமிட்டுள்ளன.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்குட்பட்ட அமேதி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தற்போது பொறுப்பு வகித்துவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

    அதே மாநிலத்துக்குட்பட்ட ரேபரேலி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகிக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுவாரா? அல்லது, அவரது மகள் பிரியங்கா வதேரா வேட்பாளராக நிறுத்தப்படுவாரா? என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை என்றும் டெல்லி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. #RahulGandhi #RahulGandhitAmethi 
    Next Story
    ×