search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்சி பிரமுகர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் - மக்களவையில் திரிணாமுல் எம்.பி.க்கள் அமளி
    X

    கட்சி பிரமுகர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் - மக்களவையில் திரிணாமுல் எம்.பி.க்கள் அமளி

    அசாமில் கட்சி பிரமுகர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து திரிணாமுல் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. #MonsoonSession #NRCBill #TMC
    புதுடெல்லி:

    அசாம் மாநிலத்தில் வசிப்போர் குறித்த தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பதிவேடு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    இந்த பதிவேட்டில் சுமார் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளதற்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. 

    இந்த விவகாரம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளியை ஏற்படுத்தியது. மாநிலங்களவை கடந்த இரு தினங்களாக ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று காலை மக்களவை கூடியதும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எழுந்து கோஷமிட்டனர்.

    அசாமில் நுழைய முயன்ற திரிணாமுல் காங். உறுப்பினர்களை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அவையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. இதையடுத்து, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மக்களவைவை சிறிது நேரம் ஒத்திவைத்தார். #MonsoonSession #NRCBill #TMC
    Next Story
    ×