search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசை கண்டித்து அக்.2-ல் உண்ணாவிரதம் தொடங்குகிறார் அன்னா ஹசாரே
    X

    மத்திய அரசை கண்டித்து அக்.2-ல் உண்ணாவிரதம் தொடங்குகிறார் அன்னா ஹசாரே

    லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா நியமனங்களை உடனடியாக நியமிக்கக்கோரி அக். 2-ந்தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்து உள்ளார். #Annahazare
    மும்பை:

    ஊழல் எதிர்ப்பு போராளியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே லோக்பால் தேர்வுக்குழு நியமனம் மற்றும் லோக் ஆயுக்தா நீதிமன்றம் அமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவரிடம் பேசிய மத்திய அரசு, ஹசாரேவின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவோம் என உறுதியளித்தது. இதைத்தொடர்ந்து மார்ச் 29-ந்தேதி தனது போராட்டத்தை அவர் வாபஸ் பெற்றார். ஆனால் இந்த கோரிக்கைகளை மத்திய அரசு இன்னும் நிறைவேற்றவில்லை.



    எனவே லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா நியமனங்களை உடனடியாக நியமிக்கக்கோரியும், விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரியும் அக்டோபர் 2-ந்தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்து உள்ளார்.

    மத்திய அரசை கண்டித்து நடைபெறும் இந்த போராட்டத்தை மராட்டிய மாநிலம் அகமது நகரில் உள்ள தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் நடத்த இருப்பதாக பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிதேந்திர சிங்குக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.  #Annahazare
    Next Story
    ×