search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா, ராகுல், தேவே கவுடாவை சந்தித்தார் மம்தா பானர்ஜி
    X

    சோனியா, ராகுல், தேவே கவுடாவை சந்தித்தார் மம்தா பானர்ஜி

    டெல்லி சென்றுள்ள மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி காங்கிரசின் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் தேவே கவுடா ஆகியோரை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார். #MamataBanarjee #SoniaGandhi #RahulGandhi #DeveGowda
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் மம்தா பானர்ஜி. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    இதற்கிடையே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத்துக்கான தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி அடுத்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி கொல்கத்தாவில் மெகா பேரணி நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

    இந்த பேரணியில் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.



    அதன் ஒரு பகுதியாக, தலைநகர் டெல்லிக்கு வந்த மம்தா பானர்ஜி அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேரணியில் பங்கேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.

    இந்நிலையில், மம்தா பானர்ஜி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்தார். அப்போது காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் உடனிருந்தார். இருவரையும் பேரணியில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்தார். 

    மேலும்,  டெல்லியில் பாராளுமன்றம் வளாகத்தில் சமாஜ்வாதி கட்சி எம்.பி.யான ஜெயாபச்சன், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவே கவுடாவை சந்தித்து பேரணியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளார். #MamataBanarjee #SoniaGandhi #RahulGandhi #DeveGowda
    Next Story
    ×