search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2022-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு வழங்கப்படும் - பிரதமர் நரேந்திர மோடி
    X

    2022-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு வழங்கப்படும் - பிரதமர் நரேந்திர மோடி

    வருகிற 2022-ம் ஆண்டிற்குள் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு வழங்கப்படும் என்ற இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். #PMModi
    லக்னோ :

    “பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா” எனும் திட்டப்படி 2022-ம் ஆண்டுக்குள் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

    இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற்ற நகர்புற நிலப்பரப்பு மாற்றம் குறித்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது :-

    வரும் 2022-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் ஒரு வீடு என்ற இலக்கை அடைவதற்காக நகர்புறங்களில் 54 லட்சம் வீடுகளும், கிராமப்புறங்களில் ஒரு கோடி வீடுகளும் வழங்கப்பட உள்ளது. 3 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் எளிமையாகவும் சௌகரியமாகவும் வாழ நாங்கள் உறுதியேற்றுள்ளோம்.

    எதிர்கால தலைமுறையினருக்காக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது 7.5 % உள்ளது. இனி வரும் காலங்களில் பொருளாதாரம் இதனைவிட வேகமாக வளர்ச்சியடையும். 

    எளிதான வாழ்க்கை, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் & பொழுதுபோக்கு ஆகிய ஐந்தையும் அடிப்படையாக கொண்டது தான் வாழ்க்கை ஆகும்.

    நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் தருணத்தில் நாட்டில் ஒரு நபர் கூட வீடு இல்லாமல் இருக்க கூடாது என்ற குறிக்கோளை அடைய நடவடிக்கை எடுக்கப்படும்.  

    இவ்வாறு அவர் கூறினார். #PMModi
    Next Story
    ×