search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காளத்தின் பெயர் பங்ளா என மாற்றம்
    X

    மேற்கு வங்காளத்தின் பெயர் பங்ளா என மாற்றம்

    பெங்காலி, ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளுக்கும் பொதுவாக ‘பங்ளா’ என்ற பெயர் மாற்றம் செய்து மேற்கு வங்காள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #WestBengal #Bangla
    கொல்கத்தா:

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வங்காளம் 2 ஆக பிரிக்கப்பட்டது. மேற்கு வங்காளம் இந்தியாவுடன் இணைந்தது. கிழக்கு வங்காளம் பின்னர் வங்காளதேசம் என தனி நாடு ஆனது. வங்காளத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும், ஆங்கில எழுத்தின்படி மாநிலங்களின் பட்டியலில் கடைசி வரிசையில் இருப்பதை தவிர்க்கவும் மேற்கு வங்காளத்தின் பெயரை மாற்ற அந்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முடிவு செய்தார்.

    இதையடுத்து 2011-ம் ஆண்டு மேற்கு வங்காளத்தை ‘பச்சிம் பங்கா’ என பெயர் மாற்றம் செய்யக்கோரி மத்திய அரசின் ஒப்புதலுக்கு மம்தா பானர்ஜி அனுப்பினார். ஆனால் அதை மத்திய அரசு ஏற்கவில்லை. இதையடுத்து பெங்காலியில் ‘பங்ளா’ எனவும், ஆங்கிலத்தில் ‘பெங்கால்’ எனவும், இந்தியில் ‘பங்கால்’ எனவும் மாற்றக்கோரி மீண்டும் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதுவும் நிராகரிக்கப்பட்டது.

    இந்நிலையில் பெங்காலி, ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளுக்கும் பொதுவாக ‘பங்ளா’ என்ற பெயர் மாற்றம் செய்து மேற்கு வங்காள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை மத்திய அரசின் ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகத்துக்கு மேற்கு வங்காள அரசு நேற்று அனுப்பியது. 
    Next Story
    ×