search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கிக்கடன் மோசடியில் தேடப்படும் மெஹுல் சோஸ்கி ஆன்டிகுவா சென்றதாக தகவல்
    X

    வங்கிக்கடன் மோசடியில் தேடப்படும் மெஹுல் சோஸ்கி ஆன்டிகுவா சென்றதாக தகவல்

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடி பெற்று மோசடி செய்த மெஹுல் சோஸ்கி அமெரிக்காவில் இருந்து ஆன்டிகுவா சென்றுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. #MehulChoksi #PNBScam
    புதுடெல்லி:

    குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். 

    இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சிபிஐயில் அளித்த புகாரை அடுத்து, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோஸ்கிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சோதனையை அடுத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இவர்கள் இருவருக்கும் எதிராக ஜாமினில் வெளிவர முடியாத வாரண்டை மும்பை சிறப்பு கோர்ட் பிறப்பித்துள்ளது. மேலும், இண்டெர்போல் அமைப்பு இருவருக்கும் எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், அமெரிக்காவில் இருந்த மெஹுல் சோஸ்கி இந்த மாத தொடக்கத்தில் கரீபியன் தீவான ஆன்டிகுவாவுக்கு சென்றுள்ளதாகவும், அங்கு அவர் அந்த நாட்டின் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகவும் இண்டெர்போல் அளித்த நோட்டீசுக்கு பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    முதல் குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட நிரவ்மோடி ஹாங்காங்கில் இருப்பதாகவும், அங்கிருந்து அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×