search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேசம், திரிணாமுல் காங். எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
    X

    பாராளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேசம், திரிணாமுல் காங். எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

    பாராளுமன்ற வளாகத்தில் இன்று தெலுங்குதேசம் கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #AndhraSpecialStatus #AndhraMPsProtest
    புதுடெல்லி:

    ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆளும் தெலுங்குதேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். ஆனால், மத்திய அரசு இந்த விஷயத்தில் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை.

    இந்நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதும், தெலுங்குதேசம் கட்சி சார்பில் மத்திய அரசு மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் போதிய எம்.பி.க்களின் ஆதரவு இல்லாததால் இந்த தீர்மானம் தோல்வியடைந்தது. எனினும் ஆந்திர எம்.பி.க்களின் போராட்டம் தொடர்கிறது.

    அவ்வகையில் இன்று தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.



    இதேபோல் வன்முறைத் தாக்குதல்களைக் கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும், காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதற்கிடையே, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தியும், இந்த விஷயத்தில் மக்களை ஏமாற்றிய கட்சிகளைக் கண்டித்தும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. #AndhraPradesh #AndhraSpecialStatus #AndhraMPsProtest
    Next Story
    ×