search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான் அல்வார் கொலை தொடர்பாக பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கேள்வி - பாஜக எதிர்ப்பு
    X

    ராஜஸ்தான் அல்வார் கொலை தொடர்பாக பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கேள்வி - பாஜக எதிர்ப்பு

    ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியில், பசுவை கடத்தியதாக வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. #MobLynching #CowRakshaks #AlwarLynching
    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியில் உள்ள லாலாவாண்டி காட்டுப் பகுதியில் பசுக்களை கடத்தியதாக கூறி ரக்பர்கான் என்ற வாலிபர் சமீபத்தில் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    ரக்பர்கான் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், இருக்கும்போது அங்கு வந்த ராம்நகர் போலீசார் அடிபட்டவரை காப்பாற்றுவதில் கவனம் செலுத்தாமல், பசுக்களை பாதுகாப்பதிலும், அவற்றை  கோஷாலாவுக்கு கொண்டு செல்வதிலுமே கவனம் செலுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.



    இந்நிலையில், இதுதொடர்பாக இன்று பாராளுமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி கரன் சிங் யாதவ் கேள்வி எழுப்பினார். பசுக்களை கடத்துவதாக பாஜகவினர் சிலர் போராட்டம் நடத்தினர், ஆனால் ரக்பர்கான் கொலை வழக்கில் அவர்களிடம் எவ்வித கேள்வியும் எழுப்பப்படவில்ல எனவும் அவர் குற்றம்சாட்டினார். 4 மணி நேரமாக ரக்பர்கானை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், போலீசார் காட்டிய அஜாக்கிரதை காரணமாகவே அந்த வாலிபர் இறந்ததாகவும் எம்.பி கரன் சிங் தெரிவித்தார்.

    மேலும், உன்னாவோ கற்பழிப்பு வழக்கை மேற்கோள் காட்டிய எம்.பி கரன் சிங் குற்றவாளிக்கு ஆதரவாகவே பா.ஜ.க தலைவர்கள் இருந்தார்கள் என தெரிவித்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பாராளுமன்றத்தில் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.

    பசு பாதுகாப்பு என்ற பெயரில் அல்வார் பகுதியில் நடைபெற்ற இந்த கொடூர கொலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ராஜஸ்தான் அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது. #MobLynching #CowRakshaks #AlwarLynching
    Next Story
    ×