search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்சியை பாதிக்கும் வகையில் கருத்து கூறினால் கடும் நடவடிக்கை - ராகுல்
    X

    கட்சியை பாதிக்கும் வகையில் கருத்து கூறினால் கடும் நடவடிக்கை - ராகுல்

    கட்சியை பாதிக்கும் வகையில் கருத்து கூறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் எச்சரித்துள்ளார். #RahulGandhi #Congress

    புதுடெல்லி:

    காங்கிரசில் முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பான காரிய கமிட்டி மாற்றி அமைக்கப்பட்டதையடுத்து அதன் முதல் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது.

    கூட்டத்தில் கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசும் போது கூறியதாவது:-

    தற்போது நாடு அடக்கு முறையில் சிக்கி இருக்கிறது. இதை மீட்பதற்கு அனைத்து காங்கிரஸ் கட்சியினரும் போராட வேண்டும். நாம் அனைவரும் கூட்டாக சேர்ந்து ஒடுக்கு முறைகளை எதிர்கொள்ள வேண்டும்.

    காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு என்று தனி கவுரவம் இருக்கிறது. சுதந்திர போராட்ட காலத்திலேயே காங்கிரஸ் காரிய கமிட்டி சிறப்பான முடிவுகளை எடுத்து சுதந்திரம் கிடைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

    காங்கிரசின் கொள்கைகளை அனைத்து மக்களிடமும் கொண்ட செல்ல வேண்டும். புதிய வாக்காளர்களை நம்பக்கம் இழுக்க வேண்டும்.

    வாக்காளர்களின் எண்ணிக்கையை கட்சிக்கு அதிகரிப்பது தான் நமது முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு தொகுதியிலும் நமக்கு ஓட்டு போடாத மக்கள் யார்? என்பதை கண்டறிந்து அவர்களை அணுகி நமது நம்பிக்கையை பெற செய்ய வேண்டும்.

    இப்போது நாம் மிகப் பெரிய போராட்டத்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம். எல்லோருக்கும் கட்சி அமைப்புக்குள் பேசுவதற்கு உரிமை இருக்கிறது.

    அதே நேரத்தில் நமது போராட்டத்தை பாதிக்க செய்யும் வகையில் தலைவர்கள் யாராவது தவறான கருத்துக்களை கூறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நான் தயங்க மாட்டேன்.

    இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

    கூட்டத்தில் சோனியா காந்தி பேசும்போது, நாம் பெரிய கூட்டணியை உருவாக்க வேண்டும். நாம் அனைவரும் ராகுல் காந்தியுடன் சேர்ந்து தீவரமாக பணியாற்ற வேண்டும்.

    நமது மக்கள் ஆபத்தான ஆட்சியை சந்தித்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டியது நமது கடமை. இந்த நாட்டை நாம் மீட்டு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று கூறினார். #RahulGandhi #Congress

    Next Story
    ×