search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி இன்று வெளிநாடு செல்கிறார்
    X

    பிரதமர் மோடி இன்று வெளிநாடு செல்கிறார்

    பிரதமர் நரேந்திர மோடி ருவாண்டா, உகாண்டா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக இன்று புறப்பட்டு செல்கிறார். #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி ருவாண்டா, உகாண்டா, தென்ஆப்பிரிக்கா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக இன்று (திங்கட்கிழமை) புறப்படுகிறார். முதல் நாள் பயணமாக ருவாண்டா நாட்டுக்கு மோடி இன்று செல்கிறார்.

    கடந்த 20 ஆண்டுகளில் ருவாண்டா செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். இந்த பயணத்தின் போது கிகாலி என்ற இடத்தில் 1994-ம் ஆண்டு இனப்படுகொலை நடந்த இடத்தை பார்வையிடுகிறார்.

    அதை தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) உகாண்டாவுக்கு மோடி செல்கிறார். உகாண்டா நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். உகாண்டா நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ள முதல் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.



    பின்னர் 25-ந் தேதி தென்ஆப்பிரிக்காவுக்கு மோடி செல்ல உள்ளார். அங்கு நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் சர்வதேச நாடுகளிடையே அமைதி, பாதுகாப்பு குறித்த முக்கிய அம்சங்கள் இடம்பெறுகின்றன.

    ஆப்பிரிக்க பயணத்தின் போது 3 நாடுகளின் அதிபர்களை தனித்தனியாக சந்தித்து, இந்தியாவுடன் உறவை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் அங்குள்ள இந்திய சமூகத்தினருடன் அவர் கலந்துரையாட உள்ளார் என இந்திய வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.  #PMModi
    Next Story
    ×