search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவத்தை வலுப்படுத்த மத்திய பணியாளர் தேர்வாணையம் 55 ஆயிரம் பேரை ராணுவத்தில் இணைக்க நடவடிக்கை
    X

    ராணுவத்தை வலுப்படுத்த மத்திய பணியாளர் தேர்வாணையம் 55 ஆயிரம் பேரை ராணுவத்தில் இணைக்க நடவடிக்கை

    ராணுவத்தின் வலிமையை அதிகரிக்கும் விதமாக ராணுவத்துக்கு 55 ஆயிரம் பேரை தேர்ந்தெடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    ராணுவத்தின் வலிமையை அதிகரிக்கும் விதமாக ஆள் எடுப்பது அவ்வப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ராணுவத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஒரே நேரத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையம் 55 ஆயிரம் பேரை தேர்வு செய்து ராணுவத்தில் இணைக்க அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

    சமீப காலமாக ஒரே நேரத்தில் ராணுவத்துக்கு இவ்வளவு பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும்.

    மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை, இந்திய-திபெத்திய எல்லை போலீஸ், மத்திய தொழிலக பாதுகாப்பு படை, சகஸ்திரா சீமா பால், அசாம் ரைபிள்ஸ், தேசிய விசாரணை முகமை ஆகியவற்றில் மொத்தம் 54,953 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய மத்திய பணியாளர் தேர்வாணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

    இதில் ஆண்களுக்கான மொத்த காலி இடங்கள் 47,307 ஆகும். பெண்களுக்கு 7,656 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

    இதில் அதிகபட்சமாக மத்திய ரிசர்வ் படைக்கு 21,566 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு கம்ப்யூட்டர் முறையிலும் தேர்வு நடத்தப்படும்.

    இதுபற்றி ராணுவ இலாகாவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “புதிய படைப்பிரிவுகளை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்த புதிய காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது” என்றார். 
    Next Story
    ×