search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    7 மாத குழந்தை பாலியல் பலாத்காரம் - ராஜஸ்தான் புதிய சட்டப்படி வாலிபருக்கு மரண தண்டனை
    X

    7 மாத குழந்தை பாலியல் பலாத்காரம் - ராஜஸ்தான் புதிய சட்டப்படி வாலிபருக்கு மரண தண்டனை

    ராஜஸ்தான் மாநிலத்தில் 7 மாத கைக்குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளிய 19 வயது வாலிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #Rajasthan
    ஜெய்ப்பூர்:

    12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை மத்திய பிரதேச மாநில அரசு அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து 2-வது மாநிலமாக ராஜஸ்தான் அரசும் இதேபோல் கடந்த மார்ச் மாதம் புதிய சட்டத்தை இயற்றியது.

    இந்நிலையில், கடந்த 9.5.2018 அன்று ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் லக்‌ஷ்மன்கர் பகுதியில் தாதியின் பராமரிப்பில் இருந்த 7 மாத பெண் குழந்தையை பறித்து சென்ற ஒருவன், அருகாமையில் உள்ள கால்பந்து திடலில் வீசிச் சென்றான். குழந்தையை தேடித் திரிந்த பெற்றோர்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தங்களது மகளை கண்டெடுத்து, அல்வார் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இந்த கோர சம்பவம் தொடர்பாக, அந்த தாதியின் உறவினரான 19 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் அறிமுகப்படுத்திய புதிய சட்டம் ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் அதிவிரைவு நீதிமன்றத்தில் பிடிபட்ட வாலிபர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

    13 முறை நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்து நீதிபதி சமீபத்தில் தீர்ப்பளித்தார். பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் இந்த பாதகத்தை செய்த குற்றவாளிக்கு, புதிய சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். ராஜஸ்தான் அரசின் புதிய சட்டத்தின் கீழ் முதன்முறையாக கற்பழிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது இந்த வாலிபருக்குதான் என்பது குறிப்பிடத்தக்கது. #Rajasthan
    Next Story
    ×