search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசைக் கண்டித்து ஆந்திராவில் 24-ம் தேதி பந்த் - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அழைப்பு
    X

    மத்திய அரசைக் கண்டித்து ஆந்திராவில் 24-ம் தேதி பந்த் - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அழைப்பு

    ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கும் விஷயத்தில் மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டதாக கூறி, 24-ம் தேதி பந்த் நடத்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. #JaganMohan #AndhraBandh
    அமராவதி:

    ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்காத மத்திய அரசை கண்டித்து ஆளும் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். ஆனால் மத்திய அரசு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இதையடுத்து தெலுங்குதேசம் கட்சி சார்பில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்திற்கு போதிய ஆதரவு இல்லாதால், எளிதில் தோற்கடிக்கப்பட்டது.



    இதுபற்றி கருத்து தெரிவித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நீதியை எதிர்பார்த்த ஆந்திரப் பிரதேசத்திற்கு மீண்டும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதாகவும், தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மத்திய அரசைக் கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    இந்நிலையில், ஆந்திராவுக்கு அநீதி இழைக்கப்பட்டதைக் கண்டித்து வரும் 24-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

    இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி செய்தியார்களிடம் கூறுகையில், “ஆந்திர மாநிலத்திற்கு பாஜக சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் அநீதி இழத்ததை கண்டித்து வரும் 24-ம் தேதி ஆந்திர மாநிலம் முழுவதும் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.  ஆந்திர மாநிலத்திற்கு எந்த தேசிய கட்சியும் சிறப்பு அந்தஸ்து வழங்கினால்  நாங்கள் ஆதரிப்போம்” என்றார். #JaganMohan #AndhraBandh

    Next Story
    ×