search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நம்பிக்கையில்லா தீர்மானம் - விவாதத்தில் பங்கேற்கும் கட்சிகளுக்கு நேர ஒதுக்கீடு அறிவிப்பு
    X

    நம்பிக்கையில்லா தீர்மானம் - விவாதத்தில் பங்கேற்கும் கட்சிகளுக்கு நேர ஒதுக்கீடு அறிவிப்பு

    தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்கும் கட்சிகளுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி :

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று, மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.  தெலுங்குதேசம் சார்பிலும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

    இதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு அனுமதி அளித்துள்ளார். இந்த மசோதா மீதான விவாதம் இன்று காலை 11 மணிக்கு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மத்திய அரசு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அவையில் பேச பா.ஜ.க உள்பட எதிர்கட்சிகளுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில், தீர்மானத்தை தொடங்கி வைத்து பேசும் தெலுங்கு தேசம் கட்சிக்கு 13 நிமிடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 38 நிமிடங்களும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ள போகும் ஆளும் பா.ஜ.க.விற்கு அதிகபட்சமாக 3 மணி நேரம் 50 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேலும், பிற எதிர்கட்சிகளான ஆ.தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், தெலுங்கான ராஷ்ட்ரிய சமிதி போன்ற கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேச முறையே 29, 27, 15 மற்றும் 9 நிமிடங்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×