என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்போம் - சிவசேனா
Byமாலை மலர்19 July 2018 9:44 AM GMT (Updated: 19 July 2018 9:44 AM GMT)
மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க உள்ளோம் என சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. #ParlimentMonsoonSession #NoConfidenceMotion #ShivSena
மும்பை:
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒப்புதல் அளித்தார். இதுதொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நாளை நடக்கவுள்ளது.
இதற்கிடையே, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூட்டணி கட்சியான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவிடம் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டாம் எனகேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க உள்ளோம் என சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக சிவசேனா எம்.பி.க்கள் வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #ParlimentMonsoonSession #NoConfidenceMotion #ShivSena
Next Story
×