search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நொய்டாவில் கட்டிடம் இடிந்து விபத்து:  50-க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தகவல்
    X

    நொய்டாவில் கட்டிடம் இடிந்து விபத்து: 50-க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தகவல்

    உ.பி மாநிலம் நொய்டாவில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விபத்துக்குள்ளானதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
     லக்னோ :

    உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவில் உள்ள ஷா பரி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் 6 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் அதன் அருகாமையில் இருந்த 4 மாடி கட்டிடமும் சேர்ந்து இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 

    இதில், 4 மாடி கட்டிடத்தில் வசித்து வந்த 18 குடும்பங்களை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனினும், உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களை பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

    விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கட்டிட விபத்து ஏற்பட்டுள்ள பகுதிக்கு விரைந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்த கவுதம் புத் மாவட்ட நீதிபதி மற்றும் உ.பி. அம்மாநில உயர் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார். 



    இந்நிலையில், விபத்து ஏற்பட்ட பகுதியில் நேரில் சென்று பார்வையிட்ட மத்திய மந்திரி மகேஷ் சர்மா, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் இடிபாடுகளில் உயிருடன் சிக்கியிருப்பவர்களை மீட்க்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், அருகாமையில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். 
    Next Story
    ×