search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் கட்சிக்கு 51 உறுப்பினர்களுடன் புதிய காரிய கமிட்டி - ராகுல் அறிவிப்பு
    X

    காங்கிரஸ் கட்சிக்கு 51 உறுப்பினர்களுடன் புதிய காரிய கமிட்டி - ராகுல் அறிவிப்பு

    51 உறுப்பினர்களுடன் புதிதாக இன்று உருவாக்கப்பட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் முதல் கூட்டம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது.
    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக ஆலோசித்து தீர்மானிக்கும் செயற்குழுபோல் இயங்கும் மத்திய காரிய கமிட்டிக்கு தேசிய அளவில் மூத்த தலைவர்கள் நியமிக்கப்படுவது வழக்கம்.

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பேற்ற பின்னர், மத்திய காரிய கமிட்டியை ராகுல் காந்தி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கலைத்து விட்டார். அதற்கு மாற்றாக 34 உறுப்பினர்களை கொண்ட புதிய நெறிமுறை குழு அமைக்கப்பட்டது.

    இந்நிலையில், 51 உறுப்பினர்களுடன் புதிதாக மத்திய காரிய கமிட்டியை ராகுல் காந்தி இன்று அமைத்துள்ளார்.

    இந்த காரிய கமிட்டியில் உறுப்பினர்களாக 23 பேர், நிரந்தர அழைப்பாளர்களாக 19 பேர், சிறப்பு அழைப்பாளர்களாக 9 பேர் என மொத்தம் 51 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வயதில் மூத்தவர்கள், இளைய தலைமுறையினர் அடங்கிய கமிட்டியாக இது அமைந்துள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கமிட்டியின் முதல் ஆலோசனை கூட்டம் ராகுல் காந்தி தலைமையில் வரும் 22-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #RahulGandhi #CongressWorkingCommittee
    Next Story
    ×