search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகாரில் கோர்ட்டு வளாகத்தில் கைதி சுட்டுக்கொலை
    X

    பீகாரில் கோர்ட்டு வளாகத்தில் கைதி சுட்டுக்கொலை

    பீகாரில் கோர்ட்டு வளாகத்தில் கைதி அபிஷேக் ஜாவுக்கு உதவ வந்த 2 கூட்டாளிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், குறி தவறி, அபிஷேக் ஜா மீது பட்டதில் கைதி பலியானார்.
    பாட்னா:

    பீகார் மாநிலம் சியோகர் மாவட்டத்தை சேர்ந்தவன் அபிஷேக் ஜா (வயது 30). ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட இவன், ஒரு வழிப்பறி வழக்கில் விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான்.

    அந்த வழக்கில், அபிஷேக் ஜாவை சிகாரனாவில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நேற்று அழைத்து சென்றனர். அதே சமயத்தில், அவனை தப்பிக்க வைப்பதற்காக, அவனுடைய கூட்டாளிகள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    கோர்ட்டு வளாகத்தில், தன்னுடன் வந்த போலீசாரின் கண்களில் அபிஷேக் ஜா திடீரென மிளகாய் பொடியை தூவினான். அவன் தப்பிக்க முயன்றபோது, போலீசார் சுதாரித்து தடுக்க முனைந்தனர்.

    அப்போது, அபிஷேக் ஜாவுக்கு உதவ வந்த 2 கூட்டாளிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், குறி தவறி, அபிஷேக் ஜா மீது பட்டது. உடனே கூட்டாளிகள் தப்பி ஓடி விட்டனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில், அபிஷேக் ஜா இறந்தான். சம்பவ இடத்தில், ஒரு கைத்துப்பாக்கியும், 3 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன. 
    Next Story
    ×