search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிழக்கிந்திய கம்பெனியின் பிரித்தாளும் கொள்கையை பின்பற்றுகிறார் மோடி - காங்கிரஸ் குற்றச்சாட்டு
    X

    கிழக்கிந்திய கம்பெனியின் பிரித்தாளும் கொள்கையை பின்பற்றுகிறார் மோடி - காங்கிரஸ் குற்றச்சாட்டு

    பிரதமர் மோடி ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் பிரித்தாளும் கொள்கையை பின்பற்றி செயல்பட்டு வருகிறார் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. #PMModi #Congress #RandeepSurjeewala
    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் புது வடிவமாக இன்றைய பாஜக திகழ்ந்து வருகிறது. அரசியலில் பிரிவினையை ஏற்படுத்தி மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என கனவு கண்டு வருகிறது.

    நாட்டை பிரிக்க நினைக்கும் பாஜகவின் முயற்சியை காங்கிரஸ் எப்போதும் அனுமதிப்பதில்லை.   

    மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

    உள்நாட்டு பாதுகாப்பு, விவசாயிகள் பிரச்னை, வேலை வாய்ப்பின்மை, கருப்பு பணம் மீட்பு உள்பட பல்வேறு விஷயங்களில் பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளது. இதை மறைக்கும் வகையில் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது.

    நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இயற்கை பேரிடரால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மகாராஷ்டிரா, அசாம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் வெள்ளத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், மோடி தேர்தல் பேரணிகளில் பங்கேற்பதிலே பிசியாக உள்ளார் என குற்றம் சாட்டினார். #PMModi #Congress #RandeepSurjeewala
    Next Story
    ×