search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிர்சாபூரில் புதிதாக கட்டப்பட்ட பன்சாகர் கால்வாயை நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி
    X

    மிர்சாபூரில் புதிதாக கட்டப்பட்ட பன்சாகர் கால்வாயை நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி

    உ.பி மாநிலம் மிர்சாபூரில் ரூ. 3 ஆயிரத்து 420 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்சாகர் கால்வாயை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணித்து வைத்தார். #BJP #Modi
    லக்னோ :

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று மிர்சாபூர் சென்றடைந்தார். அங்கு புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள பன்சாகர் கால்வாயை திறந்து வைத்து நாட்டிற்கு அர்பணித்தார்.

    இந்த திறப்பு விழாவில் பிரதமருடன் அம்மாநில முதல்வர் யோகி அதித்யநாத், கவர்னர் ராம் நாயக் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

    இதற்கிடையே, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, விவசாயிகளுக்காக முதலை கண்ணீர் வடிப்பவர்கள், அவர்களின் ஆட்சியின்போது நாடு முழுதும் கிடப்பில் போடப்பட்ட நீர் பாசன திட்டங்களை பற்றி கண்டுகொள்ளாதது ஏன்?.

    மத்தியில் தேசிய ஜனநாய கூட்டணி அமைந்த பிறகு கிடப்பில் கிடந்த திட்டங்க எல்லாம் விரைவாக செயல்படுத்தப்ப்பட்டு வருகிறது. ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்க இந்த அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் பலனை அனைவரும் விரைவில் காண்பார்கள் என அவர் தெரிவித்தார்.

    மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களின் கூட்டு திட்டமான பன்சாகர் அணையின் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்த பன்சாகர் கால்வாய் திட்டம் 3 ஆயிரத்து 420 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

    121 கி.மீ தொலைவுடைய இந்த கால்வாய் திட்டத்தின் மூலம் மிர்சாபூர் மற்றும் அலகாபாத் மாவட்டங்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 132 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் 1 லட்சத்து 70 ஆயிரம் விவசாயிகள் பயன்பெற உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து, மத்திய அரசு புதிதாக அறிவித்த மிர்சாபூர் மருத்துவ கல்லூரி திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் மிர்சாபூர் மற்றும் வாரணாசி பகுதிகளை இணைக்கும் வகையில் கங்கை நதியின் மீது கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தையும் அவர் திறந்து வைத்தார். #BJP #Modi
    Next Story
    ×