search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் வென்ற ஹிமா தாஸின் தேச பக்தியை கண்டு நெகிழ்ந்த மோடி - வீடியோ
    X

    தங்கம் வென்ற ஹிமா தாஸின் தேச பக்தியை கண்டு நெகிழ்ந்த மோடி - வீடியோ

    பின்லாந்து உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற ஹிமா தாஸின் தேச பக்தியை கண்டு தான் நெகிழ்ச்சியடைந்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #HimaDas #WorldJuniorAthletics #Modi
    புதுடெல்லி:

    பின்லாந்தில் நடந்து வரும் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் (20 வயதுக்குட்பட்டோர்) இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 400 மீட்டர் ஓட்டத்தில் 51.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதன் மூலம் உலக அளவிலான தடகளத்தில் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்த முதல் இந்திய மங்கை என்ற புதிய சரித்திர சாதனையை அவர் படைத்தார்.

    புயல்வேக ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமாதாசுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்து செய்தியை தெரிவிதுள்ளனர்.

    இந்நிலையில் பிரதமர் மோடி, ஹிமா தாஸ் வெற்றியின் மறக்க முடியாத தருணங்கள் என குறிப்பிட்டு 400 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸ் ஓடி வெற்ற பெற்ற வீடியோவை அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், ‘வெற்றிக்கு பிறகு ஆர்வத்துடன் ஹிமா தேசியக்கொடியை தேடியதும், தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அவர் உணர்ச்சி வயப்பட்டதையும் பார்த்தபோது என்னை மிகவும் நெகிழச்செய்துவிட்டது’ என மோடி  தெரிவித்துள்ளார்.  #HimaDas #WorldJuniorAthletics #Modi
    Next Story
    ×