search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாட்ஸ்-அப் தகவல்களை ‘டேப்’ செய்ய மத்திய அரசு விரும்புகிறது - சுப்ரீம் கோர்ட்
    X

    வாட்ஸ்-அப் தகவல்களை ‘டேப்’ செய்ய மத்திய அரசு விரும்புகிறது - சுப்ரீம் கோர்ட்

    மக்களின் வாட்ஸ்-அப் தகவல்களை ‘டேப்’ செய்ய மத்திய அரசு விரும்புகிறது என சுப்ரீம் கோர்ட்டு சாடியுள்ளது.
    புதுடெல்லி:

    சமூக வலைதளங்களான வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. மஹுவா மாய்த்ரா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

    வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம் கான்வில்கர், டி.ஒய் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மஹுவா மாய்த்ரா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, இதுதொடர்பான நடவடிக்கைக்கு ஆகஸ்ட் 20-ம் தேதி மத்திய அரசு டெண்டர் கோருகிறது. சமூக வலைதள மையம் உருவாக்குவதன் மூலம் மக்களின் சமூக வலைதளங்களை கண்காணிக்க விரும்புகிறார்கள் என வாதிட்டார்.

    இதனையடுத்து, மத்திய அரசு இந்திய மக்களின் வாட்ஸ்-அப் செய்திகளை டேப் செய்ய விரும்புகிறது. இது கண்காணிக்கும் அரசை உருவாக்குவது போன்றது என சுப்ரீம் கோர்ட்டு விமர்சனம் செய்தது.

    சமூக வலைதளங்களை அரசு கண்காணிப்பதற்கான முன்மொழிவை அரசு அளித்துள்ளதையும் மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டது.
     
    மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் முடிவு ஒரு கண்காணிப்பு நிலையை ஏற்படுத்துவது போன்றது, இதுதொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இவ்விவகாரத்தில் தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபாலின் வழிகாட்டலையும் கேட்டுள்ளது.

    மத்திய அரசு இவ்விவகாரம் தொடர்பாக டெண்டர் கோருவதற்கு முன்னதாக ஆகஸ்ட் 3-ம் தேதி விசாரணைக்கு எடுக்கும் என கூறியுள்ளது.
    Next Story
    ×