search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் வழக்கு தீர்ப்பு- உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார் டி.கே.ரங்கராஜன்
    X

    நீட் வழக்கு தீர்ப்பு- உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார் டி.கே.ரங்கராஜன்

    நீட் தேர்வு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் டி.கே.ரங்கராஜன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
    புதுடெல்லி:

    நீட் தேர்வில் தமிழில் வழங்கப்பட்ட வினாத்தாளில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் 49 வினாக்கள் தவறாக இருந்ததால், கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ரங்கராஜன் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண் வீதம் 49 வினாக்களுக்கு 196 மதிப்பெண் கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு மருத்துவ கலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட்டது.


    இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என தெரிகிறது. எனவே, இந்த வழக்கு தொடர்பாக, டி.கே.ரங்கராஜன் இன்று உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், நீட் வழக்கின் தீர்ப்பு தொடர்பாக சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என கூறியிருந்தார். #NEET #NeetExam #SC #Caveat

    Next Story
    ×