search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூகுளில் கூட இல்லாத ஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு ரூ.1000 கோடியா? வெடிக்கும் அடுத்த சர்ச்சை
    X

    கூகுளில் கூட இல்லாத ஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு ரூ.1000 கோடியா? வெடிக்கும் அடுத்த சர்ச்சை

    மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில், இன்னும் தொடங்கப்படாத ஜியோ இன்ஸ்டிடியூட் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #JioInstitute #HRDMinistry
    புதுடெல்லி:

    மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் பல்கலைக்கழக மானியக்குழு சமீபத்தில் தலைசிறந்த 6 நிறுவனங்களை (Institute of Eminence) தேர்வு செய்தது. இந்த நிறுவனங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1000 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

    பட்டியலில் உள்ள 6 நிறுவனங்களில் ஐஐடி மும்பை, ஐஐடி டெல்லி, ஐஐஎஸ்சி பெங்களூர் ஆகிய மூன்றும் அரசு நிறுவனங்கள் ஆகும். 
    மீதமுள்ள மூன்றில் மணிபால் பல்கலைக்கழகம், பிட்ஸ் பிலானி, ஜியோ இன்ஸ்டிடியூட் ஆகிய நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. 

    ஜியோ இன்ஸ்டிடியூட் இன்னும் பேப்பர் அளவில் கூட தொடங்கப்படாத ஒரு நிறுவனமாகும். கூகுளில் தேடிப்பார்த்தால் கூட இந்த பெயரில் எந்த நிறுவனமும் இல்லை. பின்னர், எப்படி தலைசிறந்த நிறுவனங்கள் பட்டியலில் ஜியோ இடம்பிடித்தது என பலர் கேள்வி எழுப்பினர்.



    காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இதனை விமர்சித்திருந்தன. இந்த பட்டியல் வெளியிட்ட பின்னர் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மனிதவள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேகர், ‘நாட்டில் 800 பல்கலைக்கழகங்கள் இருந்தாலும், உலகின் தலைசிறந்த 200 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் நாம் வரவில்லை. தற்போது, கல்வி நிபுணர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த 6 நிறுவனங்கள் அந்த இலக்கை எட்டும்’ என பதிவிட்டிருந்தார்.

    இன்னும், அடிக்கல் கூட நாட்டப்படாத ஒரு நிறுவனம் எப்படி தலைசிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெறும் என பலர் கேள்வி எழுப்பி விமர்சித்த நிலையில், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் மறுப்பு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொடங்கப்பட உள்ள நிறுவனங்கள் ஆகிய மூன்று விதிகளின் கீழ் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×