search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு
    X

    ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

    ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை ஆகஸ்ட் 7 வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி பாட்டியாலா கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவியில் இருந்த போது ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2006-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தலையிட்டதாகவும் இதன்மூலம் அவரும் அவரது நிறுவனமும் பயனடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி  அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதே வழக்கில் சி.பி.ஐ முன் ஆஜரான ப.சிதம்பரத்திடம் அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் கேள்விகள் எழுப்பினர். 

    இந்நிலையில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தன்னை அமலாக்க துறை கைது செய்வதற்கு எதிராக முன் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் கடந்த ஜூன் 5-ந் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி பாட்டியாலா கோர்ட், ஜூலை 10-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டது. 

    இந்நிலையில், இன்று நடந்த மனு மீதான விசாரணைக்காக ப.சிதம்பரம் ஆஜராகியிருந்தார். விசாரணை முடிவில், சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவரையும் ஆகஸ்ட் 7 வரை கைது செய்ய தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 
    Next Story
    ×