search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. மேல்முறையீடு- ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
    X

    தி.மு.க. மேல்முறையீடு- ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

    தமிழக சட்டமன்றத்தில் அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரம் தொடர்பாக, தி.மு.க. கொறடா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #MLAsDisqualification #DMKAppeal
    புதுடெல்லி:

    தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டு தனது தலைமையிலான அரசின் மீது சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதால் அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த ஐகோர்ட், சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து சக்கரபாணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதேபோல் ஓ.பி.எஸ். தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.



    இந்நிலையில், தி.மு.க. கொறடா சக்கரபாணியின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு 4 வாரங்களக்குள் பதில் அளிக்கும்படி ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். #MLAsDisqualification #DMKAppeal
    Next Story
    ×