search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவில் தெப்பக்குளம்.
    X
    திருப்பதி கோவில் தெப்பக்குளம்.

    திருப்பதி தெப்பக்குளம் ஒரு மாதத்துக்கு மூடல்

    திருப்பதியில் உள்ள ஸ்ரீவாரி தெப்பக்குளம் ஒரு மாதத்துக்கு மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. #TirupatiTemple #Tirupati
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள ஸ்ரீவாரி தெப்பக் குளத்தில் ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்சவத்திற்கு முன் பழைய நீர் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு புதிய நீர் நிரப்பப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மகா சம்ப்ரோ‌ஷணம, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 பிரம்மோற்சவங்கள் அடுத்தடுத்து நடைபெற உள்ளன.

    எனவே இம்மாதம் தெப்பக்குளத்தை சுத்தம் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஸ்ரீவாரி தெப்பக்குளம் வரும் 10-ந்தேதி மூடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து 10 நாட்களுக்கு அதிலுள்ள பழைய நீர் அகற்றப்படும்.

    தொடர்ந்து படிகளை கழுவி குழாய்களை சுத்தம் செய்து செப்பனிடும் பணிகள் நடைபெறும். நீர் சுத்திகரிக்கும் மையம் சுத்தம் செய்யப்பட்டு, அதன் பின் குளத்தில் புதிய நீர் நிரப்பி ஆகஸ்ட் 9-ந்தேதி தெப்பக்குளம் பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.

    குளத்தில் எப்போதும் பி.எச்.வேல்யூ 7 என்ற தரத்தில் தண்ணீர் இருக்குமாறு ஊழியர்கள் அடிக்கடி சோதனை செய்து வருவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #TirupatiTemple #Tirupati
    Next Story
    ×